22 Nov 2026
தொழில்

நீங்களும் தொழில்முனைவோராகலாம்!

உங்கள் தொழில் கனவை நனவாக்க உதவும் 10 எளிய படிகள்!
பகிரவும் WhatsApp
நீங்களும் தொழில்முனைவோராகலாம்!
உங்கள் தொழில் கனவை நனவாக்க உதவும் 10 எளிய படிகள்!
அவள் அரண்
செய்தியாளர்
08 Nov 2026
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
“எனக்கும் சொந்தமாக ஒரு தொழில் செய்ய வேண்டும். என்னுடைய உழைப்பில் நானும் சம்பாதிக்க வேண்டும்!” இந்த ஆசை பல பெண்களின் மனதில் இருக்கிறது. ஆனால் ஆசை வந்தவுடன் கூடவே சில கேள்விகளும் வந்துவிடுகின்றன. “என்னால் இதைச் செய்ய முடியுமா? யாராவது என்னிடம் வாங்குவார்களா? போட்ட பணம் வீணாகிவிட்டால் என்ன செய்வது?” இப்படிப்பட்ட தயக்கங்கள் இருப்பது இயல்புதான். ஆனால் அந்தத் தயக்கங்களுக்குப் பதில் தேடாமல் நம் கனவைத் தள்ளிப்போட வேண்டியதில்லை. கடந்த வாரம் அவள் அரண் இதழில் டிஜிட்டல் அழைப்பிதழ்கள் தயாரித்தல், குழந்தைகளுக்கான கற்றல் விளையாட்டுத் தொகுப்புகள், WhatsApp Catalogue சேவை, மொபைல் மூலம் பொருள் புகைப்படங்கள் எடுத்தல், Digital Memory Book தயாரித்தல் என ஐந்து வித்தியாசமான தொழில் வாய்ப்புகளைப் பார்த்தோம். அவற்றில் ஏதாவது ஒன்றைப் படித்தபோது, “அட! இதை நாமும் செய்யலாமே!” என்று உங்களுக்குத் தோன்றியிருக்கலாம். அந்தச் சிறிய எண்ணம்தான் உங்கள் தொழில் பயணத்தின் முதல் படி! ஆனால் அந்த எண்ணத்தைச் செயலாக மாற்றுவது எப்படி? 1. உங்களுக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுங்கள்! எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காக ஒரு தொழிலைத் தொடங்க வேண்டாம். உங்களுக்கு எது நன்றாக வரும்? எதைச் செய்வதில் மகிழ்ச்சி கிடைக்கிறது? வீட்டுப் பொறுப்புகளுடன் எவ்வளவு நேரம் ஒதுக்க முடியும்? என்று சிந்தியுங்கள். 2. யாருக்காகச் செய்கிறோம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்! நீங்கள் குழந்தைகளுக்கான Activity Kit தயாரிக்க விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். முதலில் சில பெற்றோர்களிடம் பேசுங்கள். “குழந்தைகளுக்கு எந்த மாதிரியான விளையாட்டுகள் பிடிக்கும்? எந்த வயதினருக்கு இது பயன்படும்?” என்று கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். வாடிக்கையாளர்களின் தேவையைப் புரிந்துகொள்வதே நல்ல தொடக்கம். 3. மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள்! நீங்கள் தொடங்க நினைக்கும் தொழிலை ஏற்கெனவே யாராவது செய்துகொண்டிருக்கலாம். அதற்காகக் கவலைப்பட வேண்டாம். அவர்கள் என்ன வழங்குகிறார்கள், எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்களால் என்ன வித்தியாசமாக வழங்க முடியும் என்று யோசியுங்கள். 4. கையில் இருக்கும் பணத்தைக் கவனமாகப் பயன்படுத்து…

Continue Reading · தொடர்ந்து படிக்க

Subscribe to read the full article.
முழுக் கட்டுரையையும் வாசிக்க சந்தா செலுத்துங்கள்.